TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 27 , 2018 2810 days 1147 0
  • சுகாதாரத்துறையில் சமநிலைப்படுத்தப்பட்ட விரிவாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காகவும், அது தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்காகவும் பதினாறாவது நிதிக்குழுவானது ஒரு உயர்மட்டக்குழுவினை அமைத்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் இரண்தீப் குலேரியர் இந்த உயர்மட்டக்குழுவின் தலைவர் ஆவார். மேலும், இக்குழுவில் நாடு முழுவதிலும் இருந்து சுகாதாரத் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் இடம் பெறுவர்.
  • ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பதவிக்கு ஹாக்கி இந்தியா அமைப்பின் மூத்த துணைத் தலைவரான இராஜிந்தர் சிங்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது தற்போதைய தலைவரான மாரியம்மா கோசியின் ராஜினாமாவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
  • அமெரிக்காவின் நகர காவல்துறையில் முதல் டர்பன் அணிந்த சீக்கிய பெண் துணை காவல் அதிகாரியாக குருசாச்கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் நியமிக்கப்படும் முதல் இந்தியப் பெண்ணும் இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்