TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 14 , 2025 191 days 177 0
  • 2026 ஆம் ஆண்டில் காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்றங்களின் சபாநாயகர்கள் மற்றும் அவைத் தலைவர்களின் 28வது மாநாட்டை (CSPOC) இந்தியா நடத்த உள்ளது.
  • பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (BMCRI) ஆனது, தென் ந்தியாவின் முதல் தொற்று நோய் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகத்தினை (IRDL) நிறுவுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • ஒன்றிய இளையோர் விவகாரத் துறையானது, புது டெல்லியில் விக்ஸித் பாரத் இளம் தலைவர்கள் பேச்சுவார்த்தையின் 2வது நாளை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
  • மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் (CSMIA) ஆனது, உலகளவில் புகழ்பெற்ற சர்வதேச விமான நிலைய சபையின் (ACI) மதிப்புமிக்க ஐந்தாம் நிலை அங்கீகாரத்தினைப் பெற்ற இந்தியாவின் முதல் விமான நிலையமாக மாறியுள்ளது.
  • மலேசிய நாடானது, இந்திய நாட்டினருக்கான நுழைவு இசைவுச் சீட்டு விலக்கினை 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வமாக நீட்டித்துள்ளது என்ற நிலையில் இதன் மூலம் இந்தியர்கள் நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் மலேசிய நாட்டிற்கு 30 நாட்கள் வரையிலான பயணங்களை மேற்கொள்ளலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்