TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 9 , 2025 12 days 73 0
  • தமிழ்நாடு அரசானது, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 319 ரூபாயாக இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) பயனாளிகளுக்கான ஊதிய விகிதத்தினை 336 ரூபாயாக உயர்த்தி நிர்ணயித்துள்ளது.
  • தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஆனது, சுமார் 120 டன் கொள்ளளவு கொண்ட இரண்டு இடம் விட்டு இடம் நகர்த்தக் கூடிய பளுத் தூக்கிகள் மூலம் மொத்தச் சரக்கு கையாளுதலை மேம்படுத்தியதன் மூலம் மற்றொரு முக்கியமான மைல்கல்லை எட்டி உள்ளது.
  • அமெரிக்காவின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் வாரியமானது, 2026 ஆம் ஆண்டின் இறுதியில் வாரன் பஃபெட்டிற்கு அடுத்தப்படியாக கிரெக் ஏபலை அதன் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.
  • மொழியின் மொழியியல் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் 265 மில்லியனுக்கும் அதிகமான போர்த்துக்கீசிய மொழி பேசுபவர்களையும் கௌரவிக்கும் வகையில் மே 05 ஆம் தேதியானது உலகப் போர்த்துகீசிய மொழி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் மே 06 ஆம் தேதியன்று உடல் குறித்த ஒரு நேர்மறை எண்ணங்களை ஊக்குவிப்பதற்காகவும், சுய ஏற்பினை மிக ஊக்குவிப்பதற்காகவும், உடல் மெலிந்த நிலை மீதான அதீத சமூகப் பிரமைக்கு எதிராக சவால் விடுப்பதற்காகவும் சர்வதேச உணவுக் கட்டுப்பாடு இல்லாத தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்திய கடலோரக் காவல்படையானது, கடல்சார் களத்தில் தேடல் மற்றும் மீட்பு மீதான நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக சென்னையில் 'SAREX -22' எனும் தேசியக் கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியை நடத்தியது.
  • 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சென்னை விமான நிலையப் பயணிகள் போக்குவரத்து வெறும் 7.2% உயர்வுடன், பயணிகள் போக்குவரத்தில் ஆறாவது இடத்திற்குச் சரிந்தது.
    • டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா விமான நிலையங்கள் இந்தப் பட்டியலில் முன்னிலையில் இருந்தன.
  • மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர், கொல்கத்தாவின் நியூ டவுன் நகரில் 'கார்ப்பரேட் பவன்’ எனும் அலுவலகத்தினைத் திறந்து வைத்துள்ளார்.
    • முதலாவது 'பிரதமர் பயிற்சித் திட்ட (PMIS) அணுகல் மையம்' ஆனது இந்த கார்ப்பரேட் பவனில் அமைந்துள்ளது.
  • இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவை இணைந்து பல்வேறு சமிஞ்ஞை உணர்வு அம்சங்களைக் கொண்ட கடல் பரப்பு கண்ணி வெடி நுட்பத்தின் (MIGM) சரிபார்ப்புச் சோதனையை மிக வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.
    • MIGM என்பது அதிகரித்து வரும் நவீன கால ரேடார் கருவிக்குப் புலப்படாத கப்பல்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக என்று DRDO அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன கடல் சார் பயன்பாட்டுக் கண்ணி வெடியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்