சமீபத்தில், மேகாலயா மாநில அரசானது வேளாண் சார் சுற்றுலா மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக ஸ்ட்ராபெரி திருவிழாவினை நடத்தியது.
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர், நவ ராய்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இயங்கும் தரவு மையப் பூங்காவைத் திறந்து வைத்துள்ளார்.
இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளின் கடற்படைகளானது, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் (HADR) பயிற்சியை மாலத்தீவில் நடத்தி வருகிறது.
ஆந்திரப் பிரதேச மாநில அரசானது, கிரியேட்டர் லேண்ட் எனப்படும் இந்தியாவின் முதல் பல்லூடகப் பொழுதுபோக்கு நகரத்தினை அமராவதியில் நிறுவுவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பொது விமானப் போக்குவரத்து அமைச்சகமானது, இராஜஸ்தானின் கோட்டா மற்றும் ஒடிசாவின் பூரி ஆகிய இடங்களில் பசுந்தட (Greenfield) விமான நிலையங்களை நிறுவச் செய்வதற்கு வேண்டிய கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளது.
காசாவை "கைப்பற்றி", அதன் பிரதேசத்தை தமது அரசின் வசமாக்குவது உள்ளிட்ட ஹமாஸுக்கு எதிரான அதன் இராணுவத் தாக்குதலை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பழமைவாதக் கட்சித் தலைவர் பிரீட்ரிக் மெர்ஸ் ஜெர்மனி நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆப்பிரிக்க உலகப் பாரம்பரியத் தினமானது, கண்டத்தின் தனித்துவமான கலாச்சார மற்றும் இயற்கைப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்காக மே 05 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Justice for Africans and People of African Descent Through Reparations" என்பதாகும்.