2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதன் சிறப்பானச் செயல்பாடுகளைத் தொடர்ந்து அங்கீகரிக்கப் பட்ட ஒரு மாநிலக் கட்சியாக நியமிக்கப் பட்ட நாம் தமிழர் கட்சிக்கு (NTK) இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) 'விவசாயி' சின்னத்தினை ஒதுக்கி உள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் காணப்படும் ஒரு காட்டு வாழைப்பழத்தில் சுமார் 4.2 மீட்டர் மஞ்சரி (பழம் வளரும் தண்டு) வளர்ச்சி பதிவாகியுள்ளதோடு இது உலகெங்கிலும் உள்ள வாழைப்பழ இனங்களில் பதிவு செய்யப்பட்ட மிக நீளமான ஒரு மஞ்சரி வளர்ச்சியாகும்.
சர்வதேச அன்னையர் தினமானது, ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்று (மே 11) அனுசரிக்கப்படுகிறது.