TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 17 , 2025 4 days 51 0
  • 6G தொழில்நுட்பங்களுக்கான காப்புரிமையைத் தாக்கல் செய்வதில் முன்னிலையில் உள்ள ஆறு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டில் எத்தனால் உற்பத்திக்காக இந்திய உணவுக் கழகத்தின் (FCI) 2.8 மில்லியன் டன்கள் (மொத்தம் 5.2 மில்லியன் டன்கள்) அரிசியை மேலும் கூடுதலாக வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்குப் பிராந்திய இராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
  • தீவிரவாதிகளுக்கு எதிராக காஷ்மீரில் ஆபரேஷன் கெல்லர் என்ற மற்றொரு இராணுவ நடவடிக்கையை இந்திய இராணுவம் தொடங்கியுள்ளது.
  • சீனாவின் மாபெரும் மண்டலம் மற்றும் சாலை உள்கட்டமைப்பு என்ற முன்னெடுப்பில் இணைவதற்கு கொலம்பியா நாடானது அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.
  • அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் வெள்ளை மாளிகையினால் வரலாற்றில் மிகப் பெரியது என்று அழைக்கப்படுகின்ற சுமார் 142 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு பெரிய ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஆண்டு சர்வதேசக் குடும்ப தினமானது, மே 15 ஆம் தேதியன்று "Family-Oriented Policies for Sustainable Development: Towards the Second World Summit for Social Development" என்ற கருத்துருவின் கீழ் கொண்டாடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்