TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 19 , 2025 2 days 47 0
  • சென்னையைச் சேர்ந்த 19 வயதான L.R. ஸ்ரீஹரி, இந்தியாவின் 86வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தினை வென்றுள்ளார்.
  • பெரு மதிப்பு மிக்க ஆஸ்டர் கார்டியன்ஸ் உலகளாவிய செவிலியர் விருதிற்குத் தேர்ந்து எடுக்கப் பட்ட 10 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக சண்டிகரைச் சேர்ந்த டாக்டர் சுக்பால் கௌர் பெயரிடப்பட்டுள்ளார்.
  • மேற்கு வங்காளத்தில் உள்ள தீஸ்தா களச் சோதனைத் தளத்தில் இந்திய இராணுவம் தீஸ்தா பிரஹார் பயிற்சியை நடத்தியது.
  • இந்திய இராணுவம் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவை அசாம் மாநிலத்தில் ராஹாத் எனும் பெரிய அளவிலான கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) மாதிரி பயிற்சியினை மேற்கொண்டன.
  • பாதசாரிகள் நடைபாதைகளைப் பயன்படுத்துவதற்கான உரிமை அரசியலமைப்பின் 21வது சரத்தின் கீழ் உறுதி செய்யப் பட்டுள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் தற்போது அங்கீகரித்துள்ளது.
  • 'மத்ஸ்யா' எனும் நீர்மூழ்கி வாகனத்தினைப் பயன்படுத்தி 6,000 மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் சார் வளங்களை ஆராய்வதற்காக வேண்டி இந்திய நாடானது, 'சமுத்திரயான்'  என்ற மனிதர்களால் மேற்கொள்ளப் படும் தனது முதல் ஆழ்கடல் ஆய்வுப் பயணத் திட்டத்தினை 2026 ஆம் ஆண்டிற்குள் தொடங்க உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு உலக வங்கி நில மாநாட்டில், கிராமப்புற நில நிர்வாகத்தில் அதன் மாறுதல் உண்டாக்கும் பணியை அங்கீகரிக்கும் விதமாக இந்தியா ஒரு தேசிய அளவிலான சாம்பியனாக கௌரவிக்கப் பட்டுள்ளது.
  • சரஸ்வதி நதிக்கான கும்பமேளா போன்ற சமயச் சடங்கு நிகழ்ச்சியான 12 நாட்கள் அளவிலான சரஸ்வதி புஷ்கரலு, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோயில் நகரமான காலேஸ்வரத்தில் தொடங்கியது.
  • சீனாவின் ஷாங்கா நகரில் நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பைப் போட்டியின் இரண்டாம் நிலை போட்டியில், இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்கள் உட்பட ஏழு பதக்கங்களுடன் இந்தியா தனது பங்கேற்பினை முடித்தது.
  • ஆயுஷ் அமைச்சகமானது, செப்டம்பர் 23 ஆம் தேதியை ஆயுர்வேத தினமாக அதிகாரப் பூர்வமாக நியமித்துள்ளது.
    • தந்தேராஸ் என்ற நாளில் இந்த நாளைக் கடைப்பிடிக்கும் முற்கால நடைமுறையில் இருந்து இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
  • கலாச்சார, மத அல்லது இன வேறுபாடுகள் பல இருந்த போதிலும் நல்லிணக்கத்துடன் வாழ்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக என்று ஆண்டுதோறும் மே 16 ஆம் தேதியன்று மிகுந்த அமைதியுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கான ஒரு சர்வதேச தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்