அஞ்சல் துறையானது, கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தின் (KSO) 125 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஒரு நினைவு அஞ்சல் தலையினை வெளியிட்டு உள்ளது.
ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் கூடிய மகாத்மா காந்தி உருவம் பதித்த பணத் தாள் தொடரில் 20 ரூபாய் மதிப்புள்ள புதிய ரூபாய்த் தாள்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.
இராஜஸ்தானின் சமையல் வகையில் சாங்க்ரி எனும் ஒரு தனித்துவமான சுவையைச் சேர்க்கும் மெல்லிய பீன்/அவரை வகைக்கு புவிசார் குறியீடு (GI) வழங்கப்பட்டுள்ளது.