TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 26 , 2025 9 days 107 0
  • 2025 ஆம் ஆண்டு FIH ஆடவர் இளையோர் உலகக் கோப்பைப் போட்டியினைத் தமிழ் நாட்டில் நடத்துவதற்காக ஹாக்கி இந்தியா (HI) மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன.
  • ஜஸ்பிரித் பும்ரா SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வாசிம் அக்ரமை முந்தி 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • சௌரா மகரேமி எழுதிய ‘Woman! Life! Freedom!’ என்ற ஈரானில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு எழுச்சியை ஆவணப்படுத்தியப் புத்தகம் ஆனது முதலில் பிரெஞ்சு மொழியில் வெளியிடப் பட்டது.
  • டெல்லியானது கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை ஆகியவற்றுடன் இணைந்து மேக விதைப்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அதன் முதல் செயற்கை மழை தோற்றுவிப்பு சோதனைத் திட்டத்தைத் தொடங்க உள்ளது.
  • இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு (IFFCO) அமைப்பானது, பிரேசிலில் அதன் முதல் வெளிநாட்டு நுண் உர ஆலையை அமைத்து வருகிறது.
  • 2024 ஆம் ஆண்டில், காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.
  • இந்தியப் பிரதமரின் குரோயேஷியா பயணம் ஆனது, 1992 ஆம் ஆண்டில் இந்திய நாட்டுடனான அந்நாட்டின் அரசு முறை உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றதுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணமாக அமைந்தது.
  • நிப்பான் கோய் நிறுவனத்தில், இந்தியாவின் முதல் இந்திய நிர்வாக இயக்குநராக G. சம்பத் குமார் நியமிக்கப்பட்டார்.
  • முதன்முறையாக, பீகாரில் கட்டமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப இரயில் என்ஜின் (இயந்திரம்) ஆனது மேற்கு ஆப்பிரிக்க நாடான நியூ கினியாவிற்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது.
  • ஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய மகிழுந்து தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, நிறுவனம் மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு சோதனை ஏவுகலத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்