சர்வதேச அணுசக்தி முகமையானது (IAEA), இதுவரையில் நடைபெறாத மிகப்பெரிய அளவிலான சர்வதேச அணுசக்தி சார்ந்த அவசர நிலைக்கான ConvEx-3 பயிற்சியினை ருமேனியாவில் நடத்தி வருகிறது.
மத்திய அரசானது, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் என்னுமிடத்தில் உள்ள கட்டார்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தில் கங்கை நீர் முதலை இனங்கள் வளங் காப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநில அரசானது, அரசுப் பள்ளிகளில் கல்வி ரீதியாக பின் தங்கி உள்ள மாணவர்கள் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் திறம் பெற்று முன்னேற உதவும் தொழில்நுட்ப அடிப்படையிலான 'வித்யா சக்தி' எனும் ஒரு திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இரத யாத்திரை யாத்ரீகர்களுக்கு நிகழ்நேர மற்றும் எளிதில் அணுகக் கூடிய இரயில் சேவைகளை வழங்குவதற்காக கிழக்குக் கடற்கரை இரயில்வே நிர்வாகமானது, 'ECoR யாத்ரா' செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
1967 ஜூன் 24 அன்று கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சட்டம் இயற்றப்பட்டதைக் குறிக்கும் வகையில், வெளியுறவுத் துறை அமைச்சகமானது பாஸ்போர்ட் சேவை தினத்தை ஜூன் 24, 2025 அன்று கொண்டாடியது.
உலகளவில் மில்லியன் கணக்கான கைம்பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 23 ஆம் தேதி அன்று சர்வதேச கைம்பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு ‘Invisible Women, Invisible Problems’ என்பதாகும்.
இந்தியாவில் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜூன் 25 அன்று ‘சம்விதான் ஹத்யா திவாஸ்’ அனுசரிக்கப்பட்டது.