TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 7 , 2025 16 hrs 0 min 70 0
  • ஸ்லைஸ் எனும் நிதி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமானது, ஸ்லைஸ் UPI கடன் அட்டை மற்றும் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் செயலியில் இயங்கும் இந்தியாவின் முதல் நேரடி வங்கி கிளை மற்றும் ATM எந்திரத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • முன்னாள் பிரதமரின் மரபினை கௌரவிக்கும் வகையில் பெங்களூரு நகரப் பல்கலைக் கழகத்தினை டாக்டர் மன்மோகன் சிங் நகரப் பல்கலைக்கழகம் என மறுபெயரிடுவதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • டெல்லியில் உள்ள தேசியப் பொதுக் கூட்டுறவு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் (NIPCCD) ஆனது, சாவித்ரிபாய் புலே தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் என மறுபெயரிடப் பட்டுள்ளது.
  • போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் (NCB) ஆனது, MED MAX என்ற நடவடிக்கையின் கீழ், ஆசியா, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய சுமார் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் ஒரு போதைப் பொருள் அமைப்பினை அகற்றியது.
  • ஜியோ நிறுவனமானது, மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவில் உள்ள T-Mobile எனும் தொலைத்தொடர்பு நிறுவனத்தினை முந்தியதன் மூலம், சந்தா தாரர்களின் எண்ணிக்கையில் உலகின் மிகப்பெரிய ஒரு நிலையான கம்பி வடம் சாராத இணைப்பு அணுகல் (FWA) வழங்குநராக மாறியுள்ளது.
  • அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ஆதரிப்பதற்காக, 2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியன்று தொடங்கவிருந்த அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான 3% எண்ணிம சேவை வரியை கனடா திரும்பப் பெற்றது.
  • கல்லூரி ஆசிரியர்களுக்கான வரைவு மாதிரி நடத்தை விதிகளை தமிழ்நாடு உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
    • இது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சமூக ஊடகங்களில் ஒளிப்படங்கள் மற்றும் இடுகைகளை உள்ளிடுவது குறித்து ஆசிரியர்களுக்கான சில குறிப்பிட்ட வழி காட்டுதல்களை உருவாக்க உதவும்.
  • இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த (UT) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு (ULB) தலைவர்களின் முதல் தேசிய மாநாடு என்பது அரியானாவின் குருகிராமின் மானேசரில் நடைபெற்றது.
    • இந்திய ஜனநாயக அமைப்பில் ULB அமைப்புகளின் பங்கினை வலுப்படுத்துவதையும் உள்ளாட்சி நிர்வாகத்தில் அவற்றின் முக்கியப் பங்கை ஆதரிப்பதையும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • "குடும்ப தத்தெடுப்பு திட்டத்தின்" கீழ் காசநோய் (TB) பரிசோதனையை உள்ளடக்கிய முதல் பிரதேசமாக புதுச்சேரி மாறியுள்ளது.
    • இந்த முன்னெடுப்பின் கீழ், மருத்துவ மாணவர்கள் வழக்கமான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக என குடும்பங்களைத் தத்தெடுத்து அவர்களின் மருத்துவ நடவடிக்கைகளை கண்காணிக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்