TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 11 , 2025 8 days 133 0
  • பிரபல கல்வெட்டியல் நிபுணர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான V. வேதாச்சலத்திற்கு தமிழ் விக்கி சூரன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு மாநில அரசு தொல்பொருள் துறையானது (TNSDA), ஏழு தொல்பொருள் தளங்களிலிருந்து அகழ்ந்தகெடுக்கப்பட்ட சுமார் 23 கரி மாதிரிகளை, துகள் முடுக்கி மூலமான திரள் நிறமாலை (AMS) என்ற நுட்பத்தினைப் பயன்படுத்தி காலக் கணிப்பு மேற்கொள்வதற்காக வேண்டி அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளது.
  • ஹரியானா மாநில அரசானது, பசுமையான சுற்றுலா மற்றும் வனவிலங்குகள் வளங் காப்பினை மேம்படுத்துவதற்காக ஆரவல்லி மலைக் குன்றுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையிலான ஆசியாவின் மிகப்பெரியப் பூங்காவினை உருவாக்கி வருகிறது.
  • ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், உலகளாவிய நிர்வாகம், அமைதி, பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தத்தை மேம்படுத்துவதற்கான 126 உறுதிமொழிகளுடன் கூடிய ஒரு மிகவும் விரிவான பிரகடனத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
    • இந்த உச்சி மாநாடானது, "Peace and Security and Reform of Global Governance" என்ற கருத்துருவில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்