சுரங்கத் துறை அமைச்சகமானது முதன்முறையாக அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் நவோகாரி சுண்ணாம்புக் கல் சுரங்கம், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நோமுண்டி இரும்புத் தாது சுரங்கம் மற்றும் சந்தூர் மாங்கனீசு மற்றும் இரும்புத் தாது லிமிடெட் நிறுவனத்தின் கம்மாத்தாரு சுரங்கம் ஆகிய மூன்று சுரங்கங்களுக்கு ஏழு நட்சத்திர அந்தஸ்த்தை வழங்கியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் உள்ள இந்திரகீலாத்ரி மலையில் உள்ள கனக துர்கா கோவிலில் மூன்று நாட்கள் அளவிலான சாகம்பரி என்ற விழாவானது நடத்தப் பட்டது.
கேரளாவின் முதல் தோல் வங்கியானது, விரைவில் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட உள்ளது.
வூலா டீ எனும் அசாமின் முதல் பொதி இல்லாத தேயிலை விற்பனை நிறுவனத்திற்கு, அதன் புதுமையான 'அழுத்தப்பட்ட அசலான முழு தேயிலை அடங்கிய தேநீர் அமிழ்வுப் பொதி மற்றும் அதன் தயாரிப்பு முறைக்கு’ 20 ஆண்டு காலக் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
100 ஆண்டுகளுக்கும் மேலான வயதுடைய ஆசியாவின் வயதான பெண் யானை என்று கருதப்படும் வத்சலா, மத்தியப் பிரதேசத்தின் பன்னா புலிகள் வளங் காப்பகத்தில் உயிரிழந்தது.
பஞ்சாப் மாநில அரசானது, வருமானத்தைப் பொருட்படுத்தாமல், மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டிற்கு 10 லட்சம் ரூபாய் வரையில் இலவச மற்றும் பணமில்லா மருத்துவச் சிகிச்சை அளிப்பதை உறுதியளிக்கும் முக்கிய மந்திரி சேஹத் யோஜனா எனும் ஒரு பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் BHIM செயலியின் மூலம் மிக ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தினை (UPI) பயன்படுத்தி நிதிப் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் முதலாவது கரீபியன் நாடுகளாக டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகியவை மாறி உள்ளன.
இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் ஜப்பானியக் கடலோரக் காவல்படை ஆகியன சென்னையில் ஜா மாதா (ஜப்பானிய மொழியில் "பின்னர் சந்திப்போம்" என்று பொருள்படும்) என்ற குறியீட்டுப் பெயரில் ஒரு கூட்டுப் பயிற்சியை நடத்தி வருகின்றன.
11வது இந்திய மக்காச் சோள உச்சி மாநாடானது புது டெல்லியில் நடைபெற்றது.
பச்சிளம் குழந்தைகளுக்காக என்று நன்கு வடிவமைக்கப்பட்ட Coartem® Baby எனும் (ஆர்டிமெதர்-லூமேபான்ட்ரின்) மலேரியா மருந்திற்கு சுவிட்சர்லாந்து முதல் கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது.
பல்கேரியா நாடானது 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் யூரோ மதிப்பினை ஏற்றுக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதுடன் யூரோ மதிப்பு மண்டலத்தின் 21வது உறுப்பு நாடாக இது மாற உள்ளது.
அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (UFO) பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே மிகவும் நன்கு பரப்புவதற்காகவும், அறிவியல் சிந்தனையை ஊக்குவிப்பதற்காகவும், உலக UFO தினம் ஆண்டுதோறும் ஜூலை 02 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது.