TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 14 , 2025 13 days 57 0
  • முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகலமான நீடிக்கப்பட்ட தாக்குதல் வரம்புடைய நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகலத்தின் (ERASR) பயன்பாட்டுச் சோதனைகள் ஆனது ஐஎன்எஸ் கவரட்டி கப்பலில் மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 % இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு தெலுங்கானா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த கப்பல் சார் சுற்றுலா சூழலை உருவாக்கச் செய்வதற்கான பாரத் பயணியர் கப்பல் திட்டத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்த முதல் இந்திய மாநிலமாக குஜராத் மாறியுள்ளது.
  • நகர்ப்புற ஏழைப் பெண்கள் எண்ணிமச் சேவை வழங்குநர்களாக மாறுவதற்காக என ஆந்திரப் பிரதேச மாநில அரசானது, 'டிஜி-லட்சுமி' என்ற புதிய முக்கியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • புதுச்சேரி அரசானது, மொழி சார் தொழில்நுட்பம் மூலம் குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், மற்ற அனைத்துப் பிராந்திய மொழிகள் மூலம் நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கும் BHASHINI என்ற ஒரு திட்டத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • குஜராத் மாநிலத்தின் ஆனந்த் என்ற பகுதியில் அமைக்கப்பட உள்ள நாட்டின் முதல் கூட்டுறவுப் பல்கலைக் கழகமான திரிபுவன் சஹாகரி விஸ்வ வித்யாலயாவிற்கு மத்தியக் கூட்டுறவுத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
  • இந்தியத் தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) ஆனது, இந்தியாவில் ஸ்டார்லிங்க் Gen1 எனும் அதன் புவி தாழ்மட்டச் சுற்றுப்பாதையில் இயங்கும் (LEO) செயற்கைக்கோள் தொகுப்பினை நிலைநிறுத்தி இயக்குவதற்கு ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு அங்கீகரித்துள்ளது.
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தலைமையிடத்தினைக் கொண்டுள்ள உலக சுகாதாரப் புத்தாக்க மன்றம் (WHIF) ஆனது, மிகவும் மதிப்புமிக்க BRICS+ உற்பத்திச் செயற்குழுவில் இணைவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிரா மாநில அரசானது, 'சர்வஜனிக் கணேஷோத்சவ்' நிகழ்வினை மாநில விழாவாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  • அசாம் மாநில அமைச்சரவையானது, அந்த மாநிலத்தில் மனித-யானை மோதலை எதிர்த்துப் போராடுவதற்கான 'கஜா மித்ரா' எனும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • உலக கிராமப்புற மேம்பாட்டுத் தினமானது, நிலையான மேம்பாட்டினை அடைவதில் கிராமப்புறங்களின் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 06 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்