தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் அமெரிக்காவின் சிகாகோவின் சர்வதேச தமிழ் மொழி அறக்கட்டளை இணைந்து வெளியிடும் ‘Tirukkural - Treasure of Universal Wisdom’ என்ற புத்தகத்தினை தமிழக முதல்வர் வெளியிட்டார்.
யூடியூப் பிரபலமும் நடிகருமான பிரஜக்தா கோலி, டைம் இதழின் முதலாவது TIME100 படைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்ற முதல் இந்தியப் படைப்பாளி என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ஆனது, “ஃபயர் டிரெயில்” என்ற குறியீட்டுப் பெயரில் நடவடிக்கையினை மேற்கொண்டு பெரிய அளவிலான சீனப் பட்டாசுகளை வெற்றிகரமாகக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தது.
மின்கல உற்பத்தி மற்றும் புதிய எரிசக்தி தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பில் தம் மாநிலத்தின் தலைமைத்துவத்திற்கென தெலுங்கானா மாநில அரசானது இந்தியா எரிசக்தி சேமிப்புக் கூட்டணியின் (IESA) 2025 ஆம் ஆண்டு தொழில் சிறப்பு விருதினைப் பெற்றது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் காவல்துறையானது, தங்களை மதப் துறவிகள் என்று பொய்யாகக் வெளிப்படுத்தி மக்களின் நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் மீது 'காலனேமி' என்ற மாநில அளவிலான அடக்குமுறை நடவடிக்கையினைத் தொடங்கியுள்ளது.
இடிக்கப்பட்ட பிறகு மீண்டும் கட்டமைக்கப்பட்ட மும்பையின் புகழ்பெற்ற கர்னாக் பாலம் ஆனது, இந்திய ஆயுதப்படைகளின் செயல்பாட்டின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பெயரால் மறுபெயரிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீஅமர்நாத் யாத்திரை மிகப் பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் நடத்தப் படுவதை உறுதி செய்வதற்காக இந்திய இராணுவம் ஆனது ஆபரேஷன் ஷிவா 2025 என்ற நடவடிக்கையினைத் தொடங்கியுள்ளது.
மனித உடலில் புரதத்தின் செயல்பாடுகள் பற்றிய புரிதலை விரைவுபடுத்துவதற்காக வடிவமைக்கப் பட்ட BioEmu என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பினை மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனமானது, இந்தியாவில் பயிர்க் கண்காணிப்பு மற்றும் கள அளவிலான தரவுப் பகுப்பாய்வை மேம்படுத்துவதற்காக வேளாண் கண்காணிப்பு மற்றும் நிகழ்வு கண்டறிதல் API (AMED API) இடைமுகத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய பெண்கள் உரிமை ஆர்வலர் வர்ஷா தேஷ்பாண்டேவுக்கு தனிநபர் பிரிவில் 2025 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை விருது வழங்கப் பட்டுள்ளது.
கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள அர்த்துங்கல் காவல் நிலையம் ஆனது, இந்தியத் தர நிலைகள் வாரியத்திலிருந்து IS/ISO 9001:2015 சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் காவல் நிலையமாக மாறியுள்ளது.