பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம் ஆனது ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அமராவதி நகரில் முதன்முறையாக இவ்வகையிலான மேம்பட்ட AI+ வளாகத்தினை உருவாக்க உள்ளது.
இந்திய விண்வெளி வீரர் குழு தலைவர் சுபன்ஷு சுக்லா 18 நாட்களுக்குப் பிறகு தனது ஆக்சியம் மிஷன் 4 (Ax-4) குழு உறுப்பினர்களை பூமிக்குத் திரும்ப அழைத்து வந்த விண்வெளி இயந்திர அமைப்பினால் அமெரிக்காவின் சான் டியாகோ கடற்கரையில் தரையிறக்கினார்.
கோலா மழைக்காடு தேசியப் பூங்கா (GRNP) மற்றும் திவாய் தீவு வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றை உள்ளடக்கிய சியரா லியோனின் கோலா-திவாய் வளாகமானது, அந்நாட்டின் முதல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று இந்திய உர நிறுவனங்கள் ஆனது 2025–26 ஆம் ஆண்டு வரை ஆண்டு தோறும் சுமார் 3.1 மில்லியன் மெட்ரிக் டன் டை அமோனியம் பாஸ்பேட் (DAP) இறக்குமதி செய்வதற்காக சவுதி அரேபியாவின் மேடன் நிறுவனத்துடன் ஐந்து ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்தியப் பொட்டாஷ் லிமிடெட் (IPL), கிருஷக் பாரதிக் கூட்டுறவு (KRIBHCO) மற்றும் கோரமண்டல் ஆகியவை சவுதி சுரங்க நிறுவனமான மேடனுடன் கைகோர்க்கின்றன.
முதன்முறையாக, பொதுத் தகவல்தொடர்பை மேம்படுத்துவதற்காக, நான்கு மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அதிகாரப் பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
J. இராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார் மற்றும் P. அமுதா ஆகியோர் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக புதிய தகவல்கள் மற்றும் நலத்திட்டங்களைப் பகிர்ந்து கொள்வர்.
திருச்சியின் வரகனேரியில் புதுப்பிக்கப்பட்ட பிரான்சிஸ் நூலகத்தினைத் தமிழக துணை முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த நூலகமானது 1952 ஆம் ஆண்டு திராவிடர் கழக நிறுவனர் ஈ.வெ. இராமசாமி அவர்களால் தலைவர் பிரான்சிஸின் நினைவாக நிறுவப் பட்டது.