TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 17 , 2025 10 days 129 0
  • இரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) முதல் பெண் தலைமை இயக்குநராக மூத்த இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரி சோனாலி மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • செவ்வாய்க் கிரகத்தில் கால் பதிக்கும் முதல் மனிதர்களில் ஒருவராக வேண்டும் என்ற இலட்சிய நோக்குடன் உள்ள 24 வயதான அமெரிக்காவின் அலிசா கார்சன் அனைத்து நாசா விண்வெளி பயிற்சி முகாம்களையும், மேம்பட்ட விண்வெளி பயிற்சித் திட்டங்களையும் நிறைவு செய்துள்ளார்.
  • கலாச்சாரத் துறை அமைச்சகமானது, இந்தியாவின் அரசியல், கலாச்சார, கல்வி மற்றும் தொழில் துறை மேம்பாட்டிற்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஆற்றியப் பங்களிப்புகளுக்காக அவரது 125வது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு ஆண்டு காலக் கொண்டாட்டத்தைத் தொடங்கியது.
  • லடாக்கின் துணை நிலை ஆளுநராக கவிந்தர் குப்தா, கோவாவின் ஆளுநராக அசோக் கஜபதி ராஜு மற்றும் ஹரியானாவின் ஆளுநராக ஆஷிம் குமார் கோஷ் ஆகிய மூன்று முக்கிய நியமனங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • ஒரு முதன்மையான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியான எரிசக்தி சேமிப்பு வாரம் (IESW) ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • இமாச்சலப் பிரதேச மாநிலமானது கல்வி அமைச்சகத்தின் 2025 ஆம் ஆண்டு தேசிய சாதனை கணக்கெடுப்பில் (NAS) குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து, 2021 ஆம் ஆண்டில் இருந்த 21வது இடத்தில் இருந்து முன்னேறி தேசிய அளவில் முதல் ஐந்து இடங்களுக்கு உயர்ந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்