TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 19 , 2025 16 hrs 0 min 16 0
  • சிக்கிம் மாநிலத்தின் பாக்யாங் மாவட்டத்தில் உள்ள யாக்டென், அந்தமாநிலத்தின் 'நாடோடி சிக்கிம்' முன்னெடுப்பின் கீழ் இந்தியாவின் முதல் எண்ணிம நாடோடி கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய இராணுவம் ஆனது, உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள கார்கா படை வீரர்கள் களப் பயிற்சிப் பகுதியில் 'பிரசாந்த் சக்தி' என்ற பெயரிலான ஒரு அதிக விளைவு அளிக்கும் செயல்பாட்டு விளக்கப் பயிற்சியினை நடத்தியது.
  • புலம்பெயர்வு, நம்பிக்கை மற்றும் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை குறித்த தமது படைப்புகளுக்காக சூடான்-ஸ்காட்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளரான லீலா அபுலேலா  2025 ஆம் ஆண்டிற்கான PEN Pinter பின்டர் பரிசை வென்றுள்ளார்.
  • ஆஸ்திரேலியாவானது, இந்தியா உட்பட 19 நாடுகளுடன் இணைந்து இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரியதொரு கூட்டு இராணுவப் பயிற்சியான Talisman Sabre 2025 எனும் பயிற்சியினைத் தொடங்கியுள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தின் படாவுனில் உள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு புதிய பிரதான் மந்திரி திவ்யஷா கேந்திரா (PMDK) தொடங்கப்படவுள்ளது.
    • இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான பயனாளிகளுக்கு பரிசோதனை, ஆலோசனை, உதவி வழங்குதல் மற்றும் சிகிச்சைக்கு பிந்தைய ஆதரவு போன்ற ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குகிறது.
  • மனித நாகரிகத்தில் குதிரைகளின் வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டாடும் வகையில், ஜூலை 11, 2025 அன்று உலக குதிரை தினம் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
    • இது மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னாவால் ஜூன் 3, 2025 அன்று உலகளவில் குதிரைகளைக் கௌரவிக்க முன்மொழியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்