ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கியப் பேரரசின் சௌத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் இந்திய வளாகத்தினை மத்தியக் கல்வித் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒரு புதிய விதிமுறைகளின் கீழ், இந்தியாவில் அதன் வளாகத்தை நிறுவிய முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் இதுவாகும்.
அனைவரும் அணுகும் வகையிலான இடஞ்சார்ந்த தொழில்நுட்பங்களின் தனிச்சிறப்பு வாய்ந்தப் பயன்பாட்டிற்காக இந்தியத் தேசியக் கடல் சார் சேவை மையம் (INCOIS) 2025 ஆம் ஆண்டிற்கான தேசியப் புவிசார் பயிற்சியாளர் விருதைப் பெற்றுள்ளது.
INCOIS என்பது புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் (MoES) கீழ் இயங்கும் ஐதராபாத்தினை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தன்னிச்சையான அமைப்பு ஆகும்.
அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனமானது மும்பையில் டெஸ்லா அனுபவ மையம் என்று அழைக்கப்படும் அதன் முதல் காட்சிக்கூடத்தை திறப்பதன் மூலம் அதிகாரப் பூர்வமாக இந்தியாவில் தனது நுழைவினை உறுதிப்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள டெஸ்லாவின் தொழிற்சாலையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் Y மாதிரிக்கான முன்பதிவுகள் இங்கு தொடங்கப் பட்டுள்ளன.
மகாராஷ்டிர முதல்வர், கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள கோன்சாரியில் அமைக்கப்பட உள்ள 4.5 MTPA உள்ளீடு திறன் கொண்ட விதர்பாவின் முதல் ஒருங்கிணைந்த எஃகு உற்பத்தி ஆலை அமைப்பதற்கான அடிக்கல்லினை நாட்டினார்.
இந்தத் திட்டமானது இந்தியாவின் மிகவும் நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் ஒன்றில் தொடங்கப்படுகிறது.