TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 23 , 2025 4 days 58 0
  • உலக சுகாதார அமைப்பால் கருவிழி பாதிப்புத் தொற்று இல்லாத நாடாக செனகல் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் உலகளவில் கருவிழி பாதிப்புத் தொற்றை ஒழித்த 25வது நாடாகவும், ஆப்பிரிக்காவில் 9வது நாடாகவும் மாறியுள்ளது.
  • உக்ரைன் ஆனது 125வது உறுப்பினர் நாடாகவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் குழுவில் இருந்து 20வது நாடாகவும் 2002 ஆம் ஆண்டின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஸ்தாபன ஒப்பந்தமான ரோம் சட்டத்தில் இணைகிறது.
  • சமீபத்தில், ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது (ESA) ஐக்கியப் பேரரசை தளமாகக் கொண்ட Frazer-Nash Consultancy உடன் இணைந்து, ஒரு ஹைப்பர்சோனிக் வேக விண்வெளி விமானத்தை உருவாக்க INVICTUS எனும் ஆராய்ச்சி திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
  • இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான SBI ஆனது, 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நுகர்வோர் வங்கியாக குளோபல் ஃபைனான்ஸ் இதழால் தேர்ந்தெடுக்கப் பட்டது.
    • இந்த விருது அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெறும் உலகின் சிறந்த வங்கி என்ற வருடாந்திர நிகழ்வில் SBI தலைவர் C.S. செட்டிக்கு வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்