மூத்த கல்வெட்டியல் அறிஞர் S. ராஜகோபாலை மிகவும் சிறப்பிற்கும் வகையில், திசையாயிரம் என்ற நினைவு புத்தகத்தை தமிழக நிதியமைச்சர் வெளியிட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் (ATR) இந்தியாவின் முதல் இருவாச்சி வளங்காப்புக்கான சிறப்பு மையம் நிறுவப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
4 நாட்கள் நடைபெறும் “2025 ஆம் ஆண்டிற்கான சாரல் விழா” தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தொடங்கப்பட்டது.
கோவையில் உள்ள ICAR-கரும்பு உற்பத்தி நிறுவனத்தின் அறிவியலார்கள் குழுவிற்கு ‘வேளாண்மை மற்றும் தொடர்புடைய அறிவியலில் புதுமை மற்றும் தொழில்நுட்பம்’ என்ற பிரிவின் கீழ் ‘2025 ஆம் ஆண்டிற்கான ராஷ்ட்ரிய கிருஷி விஞ்ஞான புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 54வது தலைமை நீதிபதியாக நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பதவியேற்றார்.
நம்பிக்கை செழித்து வளரக் கூடிய சூழல்களை உருவாகுவதற்கும், பகிரப்பட்ட மனித குலத்தை வளர்ப்பதற்கும் வேண்டி ஒரு உலகளாவிய அழைப்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது (UNGA) ஜூலை 12 ஆம் தேதியை சர்வதேச நம்பிக்கை தினமாக அனுசரிக்கிறது.
மணல் மற்றும் புழுதிப் புயல்களின் பெருமளவு எதிர்மறை தாக்கங்களானது பல்வேறு அளவுகளில் சர்வதேச அளவிலான முக்கியப் பிரச்சினைகள் என்பதை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூலை 12 ஆம் தேதியை மணல் மற்றும் தூசிப் புயல்களை எதிர்கொள்வதற்கான சர்வதேச தினமாகக் கடைப்பிடிக்கிறது.