வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதைப் பொருள் பயன்படுத்தாத இளையோர்கள் என்ற தலைப்பில் மூன்று நாட்கள் அளவிலான இளையோர்களுக்கான நன்னம்பிக்கை உச்சி மாநாடு ஆனது காசி பிரகடனத்துடன் நிறைவடைந்தது.
கேரள வேளாண் பல்கலைக் கழகத்தின் (KAU) வேளாண் வணிக தொழிற் வளர் காப்பகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆறு வேளாண் சார் புத்தொழில் நிறுவனங்கள், இராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY) - RAFTAAR வேளாண் வணிக தொழிற் வளர் காப்பகத் திட்டத்தின் கீழ் மிகச் சிறப்பாகச் செயல்படும் முயற்சிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
நாகாலாந்தில் உள்ள கிஃபைர் மாவட்டத்தின் கீழ் உள்ள லாங்மாத்ரா பகுதி அதன் முதல் மாம்பழத் திருவிழாவைக் கொண்டாடியது.
இந்திய ரிசர்வ் வங்கியானது, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 42வது சட்டப் பிரிவின் கீழ் அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் NSDL என்ற பண வழங்கீட்டு வங்கியினைச் சேர்த்து உள்ளது.
இந்தியப் படைப்பாக்க தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (IICT) மும்பையில் உள்ள NFDC வளாகத்தில் தனது முதல் வளாகத்தினைத் தொடங்கியது.
உலகில் ஆண்டுதோறும் ஜூலை 16 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) பாராட்டு தினமானது நமது உலகத்தினை வடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவின் மாறுதல் மிக்க ஆற்றலைக் கொண்டாடுகிறது.
மத்திய சட்டத் துறை அமைச்சகமானது, புது டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் மகிளா ஆரோக்கிய கக்ஸ் எனும் உடற்பயிற்சிக் கூடத்தினைத் துவக்கியது.
இது அரசாங்க வளாகங்களுக்குள் பணியிட நல்வாழ்வை உருவாக்குவதற்கான முதல் வகையான முன்னெடுப்பாகும்.