TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 5 , 2025 9 days 49 0
  • தீன்தயாள் துறைமுக ஆணையமானது, குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லாவில் இந்தியாவின் முதல் 1 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவில் தயாரித்தல் என்ற திட்டத்தின் கீழ் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலையைத் துவக்கியது.
  • மகாராஷ்டிரா மாநில அரசானது, நாக்பூர் மாவட்டத்தின் வதாம்னா கிராமத்தில் நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்தது.
  • கூகிள் நிறுவனமானது, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு மையம் மற்றும் மின் உள்கட்டமைப்பை உருவாக்க 6 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது.
  • சமீபத்தில், கம்சட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட ஒரு மிகவும் சக்தி வாய்ந்த பசிபிக் நில நடுக்கத்தினை யடுத்து, ரஷ்யாவின் க்ளுச்செவ்ஸ்காய் எரிமலை வெடித்தது.
  • காசாவில் மேற்கொண்ட போர் காரணமாக இஸ்ரேலுடனான அனைத்து ஆயுத வர்த்தகத்தையும் தடை செய்த முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாக ஸ்லோவேனியா மாறியுள்ளது.
  • நிதிச் சேவைகளை மிகவும் நவீனமயமாக்குவதிலும், பல்வேறு நிதிசார் சேவைக்கான தயாரிப்புகளுக்கான உலகளாவிய அணுகலை மேம்படுத்துவதிலும் நிதித் தொழில் நுட்பத்தின் (FinTech) பங்கை அங்கீகரிக்கும் வகையில், உலக நிதிசார் தொழில்நுட்ப தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்