தெற்கு காஷ்மீரின் குல்காமின் அகல் பகுதியில் இராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் CRPF ஆகியவற்றால் ஆபரேஷன் அகல் எனும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை நடத்தப்பட்டது.
பாதுகாப்பான மற்றும் நிகழ்நேரத் தொழில்துறை இணைப்புக்காக என சுத்திகரிப்புத் துறையில் இந்தியாவின் முதல் வரையறுக்கப்பட்ட தனியார் 5G வலையமைப்பினை (CNPN) பயன்படுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் BSNL மற்றும் நுமாலிகார் சுத்திகரிப்பு நிறுவனம் (NRL) ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.
முதல் முறையாக நடைபெற்ற செஸ் ஈஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சியை வீழ்த்தி, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் பட்டத்தை வென்றார்.