அருணாச்சல பிரதேச மலைகளில் மலையேறும் வீரரான கபக் யானோ தனது ஏழு மலையேறுதல் பயணத்தின் ஒரு பகுதியாக கிளிமஞ்சாரோ மலையை வெற்றிகரமாக ஏறியுள்ளார்.
மால்டோவா குடியரசு ஆனது, சர்வதேச சூரிய சக்திக் கூட்டணியில் அதன் 107வது உறுப்பினராக இணைந்துள்ளது.
உணவுப் பாதுகாப்பிற்கான உலகளாவியப் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் உணவு மற்றும் அமைதிக்கான M.S. சுவாமிநாதன் விருதை இந்தியப் பிரதமர் அறிமுகப் படுத்தியுள்ளார்.
நைஜீரிய நாட்டின் அறிவியலாளர் டாக்டர் அரேனாரே கடும் பட்டினி நிலையைக் குறைப்பதற்கான தனது முன்னெடுப்புகளுக்காக இந்த விருதைப் பெறும் முதல் நபராவார்.