TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 14 , 2025 2 days 23 0
  • 11 டன் அளவிலான ஆப்பிள்கள் மற்றும் பேரிக்காய்கள் புனே வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவை (APMC) அடைந்ததையடுத்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை eNAM வழியாக அவற்றின் முதலாவது மாநிலங்களுக்கு இடையேயான வேளாண் வர்த்தகத்தினை நிறைவு செய்தன.
  • ‘Why the Constitution Matters’ என்ற புத்தகத்தினை முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி (CJI) தனஞ்சய Y. சந்திரசூட் எழுதியுள்ளார்.
  • DSP மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமானது, இந்தியாவின் முதல் ஃப்ளெக்ஸி கேப் குறியீட்டு நிதியான DSP Nifty500 ஃப்ளெக்ஸி கேப் தரம் 30 என்ற குறியீட்டு நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தைக் கௌரவிக்கும் வகையில், விஸ்வ-சமஸ்கிருத-தினம் என்றும் அழைக்கப்படும் உலக சமஸ்கிருத தினமானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
  • ஆதார் முக அங்கீகாரம் ஆனது 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சாதனை அளவாக 19.36 கோடி பரிவர்த்தனைகளை எட்டியது.
    • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின்படி, 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பதிவான 5.77 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்து இது மூன்று மடங்கு உயர்வைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்