பெங்களூருவின் மஞ்சள் வழித்தடம் ஆனது நம்ம மெட்ரோ வழித்தடத்தினை 96 கி.மீ தொலைவு வரை விரிவுபடுத்தியதுடன், டெல்லி மெட்ரோவின் 353.3 கி.மீ. நீள வழித்தடத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய மெட்ரோ வலையமைப்பாக மாறியுள்ளது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆனது, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தனியார் வாகனங்களுக்கு 200 சுங்கச் சாவடி வழி பயணங்கள் அல்லது ஓராண்டுப் பயணத்தை 3,000 ரூபாயில் வழங்குவதற்கான FASTag வருடாந்திர அனுமதிச் சீட்டினை அறிமுகப்படுத்தியது.
அரசுகளுக்கிடையேயானப் பேச்சுவார்த்தைக் குழுவின் (INC) ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் உடன்பாடு ஏதும் இல்லாமல் முடிவடைந்தன.
நெகிழி மாசுபாடு குறித்த சட்டப்பூர்வ ஒப்பந்தத்தினை வரைவதற்காக ஜெனீவாவில் இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டன.