உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத்தை புராணங்களில் பரசுராமரின் பிறப்பிடமாக குறிப்பிடப்படுவதைக் காரணம் காட்டி அதனை "பரசுராம்புரி" என்று மறுபெயரிடுவதற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நடுத்தர தூரத் தாக்குதல் வரம்புடைய உந்துவிசை எறிகணை அக்னி-5, ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் வெற்றிகரமாக சோதிக்கப் பட்டது.
மேம்பட்ட தொழில்நுட்பக் கப்பல் (ATV) மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் மூன்றாவது அணுசக்தி திறன் கொண்ட உந்துவிசை நீர்மூழ்கிக் கப்பலான INS அரிதாமன், அதன் இறுதிக் கட்ட கடல் சார் சோதனைகளில் உள்ளது மற்றும் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் படையில் சேர்க்கப்பட உள்ளது.
ஃபஜ்ர் தொழுகையின் போது நைஜீரியாவின் வடமேற்கு கட்சினா மாநிலத்தில் உள்ள ஒரு மசூதியைத் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் தாக்கினர்.
ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் உலக தொழில்முனைவோர் தினமானது, உலகளவில் தொழில்முனைவோரின் புதுமை சார்ந்த நெகிழ்தன்மை, ஆர்வமிக்கப் படைப்பாற்றல் மற்றும் தாக்கத்தைக் கொண்டாடுகிறது.