TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 1 , 2025 5 days 69 0
  • டெல்லி முதல்வர் ரேகா குப்தா, கல்லூரி மாணவர்களுக்கு ஒரு முக்கியப் போக்குவரத்து இணைப்பை மீண்டும் வழங்கும் வகையில் டெல்லி பல்கலைக்கழக (DU) விளையாட்டு துறை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த புகழ்பெற்ற பல்கலைக்கழக சிறப்பு (U-சிறப்பு வகை) பேருந்து சேவையை மீண்டும் தொடங்கி வைத்தார்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேலை மூன்று ஆண்டுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • செப்டம்பர் 01 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள மாநிலத் தீயணைப்பு ஆணையத்தின் முதல் தலைவராக தமிழ்நாடு காவல் துறை தலைவர் சங்கர் ஜிவால் நியமிக்கப் பட்டு உள்ளார்.
  • யுனெஸ்கோ அமைப்பின் தொட்டுணர முடியாத மகத்தான கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் சத் மகாபர்வாவைச் சேர்க்க மத்திய அரசு செயலாற்றி  வருகிறது.
    • பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் நேபாளத்தில் தோன்றிய சத் பூஜை ஒரு பெரிய சூரியக் கடவுள் பண்டிகையாகும்.
  • இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஏமன் நாட்டின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கமான ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி போராளிக் குழுவின் பிரதமர் அகமது அல்-ரவாஹி கொல்லப்பட்டார்.
  • கவிஞர் கிடுகு வெங்கட இராமமூர்த்தியின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையிலும், தெலுங்கு மொழியின் கலாச்சார மற்றும் மொழியியல் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் வகையிலும், 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று தெலுங்கு மொழி தினம் அனுசரிக்கப்பட்டது.
  • திமிங்கலச் சுறாக்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காவும், 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று சர்வதேச திமிங்கலச் சுறா தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று, உலக நாடுகள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை அனுசரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்