ஜப்பான் போஸ்ட் வங்கி, அதன் வைப்புத்தொகையாளர்களுக்கு டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான வசதியை மேம்படுத்துவதற்காக, 2026 ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் டிஜிட்டல் யென் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் கீழ் இந்தியப் பசுமைக் கட்டிடச் சபையிடமிருந்து பசுமை நகர பிளாட்டினம் சான்றிதழைப் பெற்ற முதல் நகரமாக மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாறியது.
அமெரிக்காவுடன் இணைந்து நடத்தப்படும் 21வது யுத் அபியாஸ் கூட்டு இராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்கிறது.
அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறும் பிக்கில்பால் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்க உள்ளது.
இந்திய பிக்கில்பால் சங்கம் (IPA) ஆனது, முதன்முதலில் தேசிய பிக்கில்பால் பந்து அணிக்கான தேர்வு சோதனைகளை அகமதாபாத்தில் நடத்தியது.
பாரிசு நகரில் 2025 ஆம் ஆண்டு நிறைவு விழாவின் போது பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பு (BWF) அறிவித்தபடி, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியானது புது டெல்லியில் நடத்தப்படும்.
இந்தப் போட்டியானது, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியாவிலும் நடத்தப்பட உள்ளது.