நூலாசிரியர் அமிஷ் திரிபாதி இந்திய வரலாற்றுத் தொடரின் பகுதியான "The Chola Tigers: The Avengers of Somnath, part of the Indic Chronicle series" என்ற தனது புதியப் புத்தகத்தினை சென்னையில் வெளியிட்டார்.
INS திர், INS ஷார்துல் மற்றும் ICGS சாரதி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியக் கடற்படையின் முதல் பயிற்சிப் படையானது (1TS), அவற்றின் பயிற்சிப் பணிக்காக செஷெல்ஸின் போர்ட் விக்டோரியா துறைமுகத்தினை வந்தடைந்தது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தினால் TULIP அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஷில்ப் சமகம் மேளா 2025 ஆனது செப்டம்பர் 05 ஆம் தேதியன்று பெங்களூருவின் சுதந்திரப் பூங்காவில் தொடங்கப்பட்டது.
இந்தியத் தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) ஆகஸ்ட் மாதத்தில், 18.6 கோடி செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முக அடையாளச் சரிபார்ப்புகளுடன் சேர்த்து, 221 கோடிக்கும் மேற்பட்ட ஆதார் அங்கீகாரங்களைப் பதிவு செய்தது என்பதோடு இது அதிகரித்து வரும் டிஜிட்டல் ஏற்பு மற்றும் பாதுகாப்பான அடையாளப் பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
பீகாரின் ராஜ்கிரில் அமைக்கப்பட்டுள்ள பூடான் அரசப் புத்தக் கோவிலானது பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற 20வது உலகளாவிய நிலைத்தன்மை உச்சி மாநாடு ஆனது, சிறப்பு நிலையான மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
வணிகம் மற்றும் கொள்கைக் கட்டமைப்புகளில் நிலைத்தன்மையை ஒருங்கிணைப்பதன் மூலம் உள்ளடக்கிய, நெகிழ்திறன் மற்றும் நிலையான மேம்பாட்டினை ஊக்குவிப்பதை இந்த உச்சிமாநாடு நோக்கமாகக் கொண்டு உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும், கட்டிடக்கலை மற்றும் பொறியியலின் இந்த உயரமான அதிசயங்களைக் கொண்டாடுவதற்காக செப்டம்பர் 03 ஆம் தேதியன்று வானளாவிய கட்டிடங்கள் (ஸ்கைஸ்க்ரேப்பர்) தினம் அனுசரிக்கப்படுகிறது.