TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 14 , 2025 9 days 49 0
  • இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, அசாமின் நுமாலிகரில் இந்தியாவின் முதல் மூங்கில் அடிப்படையிலான உயிரிச் சுத்திகரிப்பு மையத்தினை  நிறைவு செய்துள்ளது.
  • இந்தியாவின் 15வது குடியரசுத் துணைத் தலைவராக சந்திரபுரம் பொன்னுசாமி இராதா கிருஷ்ணன் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று இந்தியாவின் 15வது குடியரசுத் துணைத் தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் பதவியேற்றார்.
  • ரஷ்யாவின் நிஷ்னியில் நடைபெற்று வரும் ZAPAD 2025 எனும் பலதரப்பு இராணுவப் பயிற்சியில் இந்திய இராணுவம் பங்கேற்றுள்ளது.
  • டியெல்லா (அல்பேனிய மொழியில் 'சூரியன்' என்று பொருள்) என்ற 'செயற்கை நுண்ணறிவு அமைச்சரை' நியமித்த உலகின் முதல் நாடாக அல்பேனியா மாறி உள்ளது என்பதோடு மேலும் அது ஊழலை எதிர்த்துப் போராடும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
  • இந்தியா தனது முதல் வெளிநாட்டு அடல் புத்தாக்க மையத்தை (AIC) டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினுடைய அபுதாபி வளாகத்தில் திறந்து வைத்துள்ளது.
  • பெங்களூருவின் விதான் சௌதாவில் இந்திய பிராந்தியத்திற்கான காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் (CPA) 11வது மாநாடு நடைபெற்றது.
    • இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலானது "சட்டமன்றங்களில் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள்: மக்களின் நம்பிக்கையை வளர்ப்பது, மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்தல்" என்ற கருத்துருவில் நடைபெற்றது.
  • காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை செப்டம்பர் 07 ஆம் தேதியை சர்வதேச நீல வானத்திற்கான தூய்மையான காற்று தினத்தை நியமித்தது.
  • இமயமலைச் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 09 ஆம் தேதியன்று இமயமலை திவாஸ் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்