பாலில் இருந்து தயாரிக்கப்படும் சுவையான மதுரை ஜிகர்தண்டாவிற்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டுப் பதிவேட்டு அலுவலகத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காலை மற்றும் மாலை நேரங்களில் 25 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகமானது (MTC) சென்னையில் 25 பேருந்துகளை அறிமுகப் படுத்தி உள்ளது.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று ரோம் நகரில் நடைபெற்ற நான்காவது உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட ஏலத்தை இந்தியா வென்றதையடுத்து, 2027 ஆம் ஆண்டில் சென்னையில் ஐந்தாவது கடலோரக் காவல்படை உலகளாவிய உச்சி மாநாட்டை நடத்த உள்ளது.
1,800க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் விளையாட்டு, தொழில்முனைவோர் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மூலம் உள்ளடக்கிய தன்மையைக் கொண்டாடியதுடன் பர்பிள் ஃபெஸ்ட் 2025 நொய்டாவின் அமிட்டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) முதல் பிராந்திய அலுவலகம் பீகாரின் பாட்னாவில் திறக்கப் பட்டது.
டெல்லி-மீரட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RRTS) வழித்தடத்தில் இயங்கும் போது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தை எட்டியதன் மூலம் நமோ பாரத் இந்தியாவின் அதிவேக இரயிலாக மாறியுள்ளது.
துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது, துபாயில் அமைக்கப் பட்டு உள்ள அகமதாபாத்தின் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் முதல் சர்வதேச வளாகத்தைத் திறந்து வைத்தார்.
உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இந்திய ராணுவ பாய்மரக் கப்பலான திரிவேணியில் உலகின் முதலாவது முப்படையினரால் இயக்கப் படும் 'சமுத்திரப் பிரதக்சினா' பயணத்தினை மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் மேம்பாட்டிற்கு அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்கப் பங்களிப்பிற்காக முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மரணத்திற்குப் பின்னதாக பொருளாதாரத்திற்கான P. V. நரசிம்ம ராவ் நினைவு விருது வழங்கப்பட்டது.
புதைபடிவ எரிபொருள் சாராத மின்சார உற்பத்தித் திறனில் இந்தியா 250 ஜிகாவாட் அளவினை எட்டியுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை 500 ஜிகாவாட் ஆக உயர்த்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.