திருவள்ளூர் மாவட்டத்தில் காவேரிராஜபுரம், திருநெல்வேலி மாவட்டத்தில் முத்தூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கடம்பாடி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் கொருக்கை ஆகிய இடங்களில் தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகத்தினால் (SIDCO) நிறுவப் பட்ட நான்கு தொழில்துறைப் பகுதிகளைத் தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை ஜிஜு தீவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பரப்பில் “Freedom Edge” எனும் ஐந்து நாட்கள் அளவிலான முத்தரப்பு இராணுவப் பயிற்சியினை நடத்துகின்றன.
16வது ஒருங்கிணைந்த படைத் தளபதிகள் மாநாடானது கொல்கத்தாவில் உள்ள கிழக்குப் படைப் பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Year of Reforms – Transforming for the Future" என்பதாகும்.