புது டெல்லியின் ஜன்பத் பகுதியில் உள்ள இந்திய தேசிய ஆவணக் காப்பகம் (NAI), மற்றும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய ஆவணக் காப்பகக் குழுவின் (NCA) இரண்டு நாட்கள் அளவிலான 50வது பொன்விழா கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
ஒளிப்படக் கருவிகள், ஒலிப்பெருக்கிகள் மற்றும் ஒலி வாங்கிகளுடன் கூடிய மிகை மெய்த் தோற்றங்களுக்கான உள்ளமைக்கப்பட்ட புலன் கோட்டிற்கு நேராக அமைக்கப் பட்ட திரைகள் கொண்ட முதல் ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
துபாயில் நடைபெற்ற 28வது UPU காங்கிரஸின் போது, உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் (UPU) நிர்வாக சபை (CA) மற்றும் தபால் செயல்பாட்டுச் சபை (POC) ஆகியவற்றிற்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பீகாரைச் சேர்ந்த மரியம் பாத்திமா, மாநிலத்தின் முதல் பெண் FIDE மாஸ்டர் (WFM) ஆனதன் மூலம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் காட்ஸை சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் நிலை தலைமைப் பதவியாக பரவலாகக் கருதப்படுகின்ற அதன் முதல் துணை நிர்வாக இயக்குநராக நியமிக்க முன்மொழிந்தார்.