TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 25 , 2025 15 hrs 0 min 26 0
  • அரசு வேலைகளில் விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டின் கீழ் சதுரங்க வீராங்கனை R. வைஷாலி, கால்பந்து வீராங்கனை K. சுமித்ரா மற்றும் கூடைப்பந்து வீராங்கனை S. சத்யா ஆகியோர் பல்வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.
  • செயல்பாட்டுத் திறனை உறுதிப்படுத்துவதற்காக இராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் உள்ள மகாஜன் வனச் சரகத்தில் இராணுவத்தின் தென்மேற்குப் படைப் பிரிவானது அமோக் ஃப்யூரி பயிற்சியை நடத்தியது.
  • அமெரிக்காவின் சிட்னி மெக்லாலின் லெவ்ரோன், உலக சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத் தூரத்தினை 47.78 வினாடிகளில் ஓடி நிறைவு செய்து தங்கம் வென்றார்.
    • இது 400 மீட்டர் தடை தாண்டலில் இருந்து மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமாக மாற்றத்தினை நிறைவு செய்து, கடந்த 40 ஆண்டுகளில் பதிவான மிக வேகமான நிறைவு நேரம் ஆகும்.
  • வங்காளதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஹில்சா மீன்களின் முதல் தொகுதி ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று மேற்கு வங்க மாநிலத்தின் பெட்ராபோல் எல்லை வழியாக இந்தியாவிற்கு வந்தது.
    • 2019 ஆம் ஆண்டிலிருந்து, வங்காளதேச அரசானது 2012 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட அதன் ஏற்றுமதி தடைக்கு சிறப்பு விலக்கு அளித்ததன் கீழ் பூஜைப் பருவத்தில் மட்டுமே இந்தியாவிற்கு ஹில்சா ஏற்றுமதியை அனுமதித்து உள்ளது.
  • இந்தியக் கடலோரக் காவல்படையானது, கோவா கப்பல் கட்டும் தளத்தினால் கட்டமைக்கப் பட்ட ICGS அக்சர் எனப்படும் இரண்டாவது அடம்யா வகை விரைவு ரோந்து கப்பலினைப் பெற்றது.
    • இந்தக் கப்பலானது பொருளாதார மண்டல ரோந்துகள், கடத்தல் எதிர்ப்பு, கடற் கொள்ளைப் பணிகள், தேடல் மற்றும் மீட்பு மற்றும் போர்க்கால துணைக் காப்புப் பணிகளைச் செய்யும்.
  • உலக தூய்மைப்படுத்தும் தினத்தின் உலகளாவிய அனுசரிப்பு ஆனது ஆண்டுதோறும் செப்டம்பர் 20 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
    • இந்த ஆண்டு ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு துறை சார்ந்த கழிவுகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்