ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது அரியானாவின் குருகிராமில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு மையங்களில், தேர்வுகளின் போது தேர்வர்களைப் பரிசோதிப்பதற்காக செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படுகின்ற முக அடையாள அங்கீகார முறையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
உத்தரக்காண்ட் மாநில முதல்வர் ஹால்ட்வானியில் இந்திய வாள்வீச்சு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் சர்வதேச வாள்வீச்சுப் போட்டியை தொடங்கி வைத்தார்.
முன்னாள் தலைமை நீதிபதி D.Y. சந்திரசூட், அன்றாட இந்திய வாழ்க்கையை வடிவமைப்பதில் அரசியலமைப்பு விழுமியங்களின் திறன் குறித்து ஆராயும் "Why the Constitution Matters" என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.
நெருக்கமான இருதரப்பு உறவுகளை வளர்ப்பதிலும், இந்தியா-ஐக்கியப் பேரரசு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தினை (FTA) அடைவதிலும் பங்காற்றியதற்காகப் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு 'Living Bridge' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.