ஸ்பெயினின் பதின்ம வயது கால்பந்தாட்ட வீரரான பார்சிலோனா அணியினைச் சேர்ந்த லாமின் யமாலை விட 300 புள்ளிகளுக்கு மேல் முன்னிலை பெற்ற பிரான்சின் உஸ்மேன் டெம்பேலே 2025 ஆம் ஆண்டிற்கான பேலன் டி 'ஓர் விருதை வென்றுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமிதா சௌத்ரி, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் நிதி சார் முன்னெடுப்பின் (UNEP FI) நிலையான காப்பீட்டுக்கான கொள்கைகளின் (PSI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உலகளாவியப் பதவியை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளி பெண் இவரே ஆவார்.
பிரதமரால் துவங்கி வைக்கப்பட உள்ள உலக உணவு இந்தியா 2025 நிகழ்ச்சியானது புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.