TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 8 , 2025 23 days 63 0
  • தமிழ்நாடு அரசானது, மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் 11 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 01 ஆம் தேதி முதல் 'Coldrif' என்ற இருமல் நிவாரணி மருந்து விற்பனையைத் தடை செய்துள்ளது.
  • KONKAN-2025 எனப்படும் இந்தியக் கடற்படைக்கும் ஐக்கியப் பேரரசின் கடற் படைக்கும் இடையிலான இருதரப்பு பயிற்சியானது சமீபத்தில் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் தொடங்கியது.
  • இராஜஸ்தானின் முதல் நமோ பல்லுயிர்ப் பெருக்கப் பூங்காவானது அல்வாரின் பிரதாப் பந்தில் திறக்கப்பட்டது.
  • இங்கிலாந்து திருச்சபையின் 500 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் கேன்டர்பரி பேராயராக டேம் சாரா முல்லல்லி உள்ளார்.
  • நிஷாத் குமார் புது டெல்லியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் உலக தடகளச் சாம்பியன்ஷிப் போட்டியின் T47 உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்றார்.
  • ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDP) சனே தகைச்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார்.
  • இந்தியக் கடற்படையானது, குறைவான ஆழம் கொண்ட பகுதியில் இயங்கும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல்கள் தொடரில் (ASW-SWC) கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் ஆண்ட்ரோத் எனப்படும் இரண்டாம் கப்பலினை விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் கடற்படையில் இணைத்தது.
  • தமிழ்நாடு அரசானது, போருசியா டார்ட்மண்டு எனப்படும் ஜெர்மன் கால்பந்து குழுவுடன் இணைந்து தனது முதல் விளையாட்டுத் தொழில்நுட்பக் காப்பு மையத்தை நிறுவ உள்ளது.
    • இந்தத் திட்டத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் துறையின் கீழான மாநிலத்தின் புத்தொழில் திட்டமான ஸ்டார்ட் அப் தமிழ்நாடு செயல்படுத்த உள்ளது.
  • கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (SECL), இந்திய அரசின் சிறப்பு பிரச்சாரம் 5.0 என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சத்தீஸ்கரின் கோர்பாவில் உள்ள மத்தியப் பயிலரங்கில் முழுமையாக பெண்களால் இயக்கப்படும் அதன் முதல் மத்தியச் சேமிப்பு அலகினைத் திறந்துள்ளது.
    • முன்னதாக, SECL நிறுவனமானது முழுமையாக பெண்களால் இயக்கப்படும் அதன் முதல் மருந்தகத்தை சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் நிறுவியது.
  • 6வது உலகளாவிய நிதி சார் தொழில்நுட்பத் திருவிழாவானது (GFF) மும்பையில் தொடங்க உள்ளது.
    • 'Empowering Finance for a Better World Powered by AI' என்பது இந்த ஆண்டு விழாவின் கருத்துருவாகும்.
  • எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) ஆனது, கடல் மட்டத்திலிருந்து 19,400 அடி உயரத்தில், லடாக்கின் மிக் லா கணவாயில் உலகின் மிக உயரமான வாகனங்கள் இயங்கக் கூடிய வகையிலான சாலையை அமைத்துள்ளது.
    • இந்தப் புதிய சாலையானது, 19,024 அடி உயரத்தில் லடாக்கின் உம்லிங் லாவில் சாலை அமைக்கப்பட்ட அதன் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்