TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 25 , 2025 6 days 65 0
  • தமிழ்நாட்டின் முதல் 18.4 கிலோமீட்டர் நீள BRTS மேம்பால/உயர்த்தப்பட்ட வழித்தடம், கிராண்ட் சதர்ன் டிரங்க் (GST) சாலையில் கிளாம்பாக்கத்திலிருந்து மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி வரை அமைக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது.
  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிராத்தனை செய்த முதல் இந்தியப் பெண் தலைவர் என்ற பெருமையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெற்றுள்ளார்.
    • குடியரசுத் தலைவர் V. V. கிரியின் வருகைக்குப் பிறகு சபரிமலைக்கு வருகை தந்த இரண்டாவது இந்திய குடியரசுத் தலைவர் இவர் ஆவார்.
  • 2023 ஆம் ஆண்டிலிருந்து உலகின் பழங்காலப் பாரம்பரியத்தினைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 17 ஆம் தேதியன்று சர்வதேச மகத்தான கலாச்சாரப் பாரம்பரிய தினம் (IDICH) அனுசரிக்கப் படுகிறது.
  • சாலை விபத்துகள், வீழ்ச்சிகள் மற்றும் வன்முறையால் ஏற்படும் அதிர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதி அன்று உலக அதிர்ச்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்