TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 26 , 2025 5 days 70 0
  • இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், திறன்களை மேம்படுத்துவதற்காகவும், சுதந்திரமான மற்றும் தடையற்ற இந்தோ-பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தினை ஊக்குப்பதற்காகவும் கியூஷு மற்றும் யோகோசுகா (ஜப்பான்) கடல் பகுதியில் ஜப்பான் - இந்தியா கடல்சார் பயிற்சி 2025 (JAIMEX 25) என்ற பயிற்சியினை நடத்தின.
  • கோவாவின் பனாஜியில் நடைபெற்ற ஒரு கலாச்சார விழாவில் 2025 ஆம் ஆண்டு FIDE சதுரங்க உலகக் கோப்பைப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ முத்திரை மற்றும் கீதத்தை இந்தியா வெளியிட்டது.
    • உலக கோப்பைப் போட்டிகளானது, வடக்கு கோவாவில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
  • 2009 ஆம் ஆண்டு முதல், மாதவிடாய் நிறுத்தத்தை எதிர்கொள்ளும் பெண்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அதை எதிர்கொள்பவர்களின் அனுபவங்களை மேம்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 18 ஆம் தேதி அன்று உலக மாதவிடாய் நிறுத்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Lifestyle Medicine in Menopausal Health" என்பதாகும்.
  • ஒவ்வோர் ஆண்டின் அக்டோபர் மாதத்திலும், இயங்கலையில் பாதுகாப்பாக இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக தேசிய இணையவெளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் (NCSAM) ஆனது உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
    • இந்தியாவில், 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, பாதுகாப்பான இணையவெளி கொண்ட இந்தியா என்று பொருள்படும் “Cyber Jagrit Bharat” என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்