சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் (RGGGH) ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைக் குழுவானது 28 வயது இளைஞருக்கு கை குறுக்கு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
இது போன்ற அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுவது இது முதல் முறை மற்றும்இந்தியாவில் இரண்டாவது முறையாகும், மேலும் உலகளவில் பதிவான நான்காவது இத்தகைய அறுவை சிகிச்சை இது ஆகும்.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் புதுப்பிக்கப்பட்ட 58 ஏக்கர் பரப்பளவிலான தொல்காப்பியப் பூங்காவை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும் யேல் பல்கலைக்கழக பேராசிரியருமான சுனில் அம்ரித், தனது "The Burning Earth: An Environmental History of the Last 500 Years" படத்திற்காக 2025 ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் அகாடமி புத்தக பரிசை வென்றுள்ளார்.
ஸ்பெயினின் காண்டோ விமான தளத்தில் ஸ்பெயின் விமானப்படை நடத்தும் பன்னாட்டு விமானப் போர் பயிற்சியான ஓஷன் ஸ்கை 2025 பயிற்சியில் இந்திய விமானப் படை (IAF) பங்கேற்கிறது.
இதில் பங்கேற்கும் முதல் நேட்டோ அல்லாத நாடு இந்தியா ஆகும்.
கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) நிறுவனத்தினால் கட்டமைக்கப் பட்ட குறைவான ஆழம் கொண்ட பகுதியில் இயங்கும் எட்டு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல்களில் (ASW SWC) முதலாவதான 'மாஹே', இந்தியக் கடற் படையிடம் வழங்கப்பட்டது.