TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 28 , 2025 3 days 36 0
  • தமிழ்நாட்டின் நீலகிரியைச் சேர்ந்த டாக்டர் அசோக்குமார் வீரமுத்து, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எல்சேவியர் பப்ளிஷர்ஸ் ஆகியவற்றினால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் சிறந்த அறிவியலாளர்களில் ஒருவராக பட்டியலிடப் பட்டுள்ளார்.
  • பாரத் ஸ்டேட் வங்கி (SBI) ஆனது குளோபல் ஃபைனான்ஸ் பத்திரிகையினால் உலகின் சிறந்த நுகர்வோர் வங்கி 2025 மற்றும் இந்தியாவின் சிறந்த வங்கி 2025 என கௌரவிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகமானது (NPCI), நுண்ணறிவு சார் உரையாடல் ஆதரவை வழங்குவதன் மூலம் பயனர் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்காக, தனியுரிம நிதித் தளம் சார்ந்த மொழி மாதிரியால் இயக்கப்படும் UPI HELP வசதியினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • பனிச்சிறுத்தைகள் மற்றும் அழியக் கூடிய அவற்றின் மலை வாழ்விடங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என்று குடிமக்கள் 23 நிமிட நேரடிச் செயல்பாடுகளை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்காக, சர்வதேச பனிச் சிறுத்தை தினத்தன்று இந்திய அரசு '#23for23' என்ற தனித்துவமான நாடு தழுவியப் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
  • ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் இரண்டாவது பெரிய இரயில்வே கண்காட்சியான 16வது சர்வதேச இரயில்வே உபகரண கண்காட்சி-2025 ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • தாய்லாந்தின் இராணி தாய் சிரிகித் பாங்காக்கில் காலமானார்.
    • அவர் அந்நாட்டின் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் மனைவியும், மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் தாயாருமாவார்.
  • ஆயுதக் குறைப்பு, ஆயுதக் கட்டுப்பாடு, அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அக்டோபர் 24–30 ஆகிய தேதிகளில் உலக ஆயுதக் குறைப்பு வாரங்கள் அனுசரிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்