இந்திய இராணுவமானது, தெற்குப் படைப் பிரிவின் கீழ் உள்ள பாலைவனப் பகுதியில் 'வாயு சமன்வய்-II' என்ற ஒரு பெரிய ஆளில்லா விமான மற்றும் ஆளில்லா விமான எதிர்ப்புப் பயிற்சியை நடத்தியது.
லிதுவேனிய-உக்ரேனிய எழுத்தாளர் ஜரோஸ்லாவாஸ் மெல்னிகாஸ் எழுதிய 'Antim Din' (இந்தியில்) என்ற புகழ்பெற்ற லிதுவேனிய புதினத்தின் இந்தி மொழிபெயர்ப்பை சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது.
பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் 120 கோடி ரூபாய் மதிப்பில் கம்பிவடத் தொங்கூர்தி திட்டத்திற்கு தேசியப் புலனாய்வு முகமை (NIA) ஒப்புதல் அளித்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய பழங்குடியின வீரர்களின் வீரம் மற்றும் தியாகங்களைக் காட்சிப்படுத்தும் வகையில், பழங்குடியினச் சுதந்திர வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் டிஜிட்டல் அருங்காட்சியகம் ஆனது சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூர் அடல் நகரில் நிறுவப்பட்டுள்ளது.
பிரதமர் நவ ராய்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் சட்டமன்றத்தின் புதியக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
மெக்ஸிகோ நகரம் ஆனது, வண்ணமயமான உடைகள், மிதவைகள் (காட்சி வாகனங்கள்) மற்றும் பாரம்பரியப் பிரசாதங்களுடன் 1.5 மில்லியன் பார்வையாளர்கள் பங்கேற்ற 2025 ஆம் ஆண்டிற்கான அதன் இறந்தோர் நாள் அணி வகுப்பை நடத்தியது.
புற்றுநோய் இறப்புகளுக்கு முக்கியக் காரணமாக உள்ள நுரையீரல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, நுரையீரல் புற்றுநோய் மாதம் ஆனது உலகளவில் நவம்பர் மாதம் அனுசரிக்கப்படுகிறது.
நனி சைவம் அடிப்படையிலான வாழ்க்கை முறைகள் மற்றும் விலங்கு நலனை மேம்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 01 ஆம் தேதியன்று உலக நனி சைவ தினம் அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Celebrating 80 Years of Vegan Living" என்பதாகும்.