சிவிங்கிப் புலிகள் வளங்காப்புத் திட்டத்தின் கீழ், அடுத்த மாதம் போட்ஸ்வானாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு, குனோ தேசியப் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு தேர்தலில் முன்னாள் நியூயார்க் மாநில ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவாவை தோற்கடித்து, நியூயார்க் நகர மேயர் பதவியை வென்ற முதல் இந்திய வம்சாவளி வேட்பாளர் என்ற பெருமையினை ஜோஹ்ரான் மம்தானி பெற்றுள்ளார்.
மேகாலயாவில் உள்ள காசி சமூகத்தினர், கருவுறுதல் மற்றும் செழிப்பின் தெய்வமான கா பிலீ சின்ஷரைக் கௌரவிப்பதற்காகவும், நல்ல அறுவடைக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் ஷில்லாங்கில் ஐந்து நாட்கள் அளவிலான ஷாத் நோங்க்ரெம் விழாவைக் கொண்டாடினர்.
உத்தரப் பிரதேசத்தின் சண்டிகர் பல்கலைக்கழகம் ஆனது, இளையோர்களிடையே புதுமை மற்றும் தொழில்முனைவினை ஊக்குவிப்பதற்காக 'கேம்பஸ் டேங்க்' என்ற ஒரு தனித்துவமான தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் ஆனது, போபாலில் உள்ள இராஜா போஜ் விமான நிலையத்தில் 'பிரதமர் ஸ்ரீ வான்வழி சுற்றுலா ஹெலிகாப்டர் சேவையை' அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால், அதன் உள்-மாநில விமானப் போக்குவரத்து இணைப்பு முன்னெடுப்பின் கீழ் ஏர் ஆம்புலன்ஸ் (வான் வழி அவசர ஊர்தி) மற்றும் ஹெலிகாப்டர் வழி சுற்றுலா சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலமாக மத்தியப் பிரதேசம் மாறியது.