தமிழ்நாடு முதலமைச்சர் 62.51 கோடி ரூபாய் செலவில் மாநிலம் முழுவதும் 12 புதிய பணி புரியும் பெண்களுக்கான தோழி விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டினார், இதன் மூலம் 740 உழைக்கும் பெண்கள் பயனடைவார்கள்.
ஃபரிதாபாத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த அர்ஷி குப்தா, இந்தியாவில் தேசிய பந்தய மோட்டார் வண்டி (கார்டிங்) சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற முதல் பெண் பந்தய வீரர் ஆனார்.
மூத்த இந்திய திரைப்பட கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு பிரெஞ்சு அரசாங்கத்தின் மதிப்புமிக்க செவாலியர் டி எல்'ஆர்ட்ரே டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ் (நைட் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ்) விருது வழங்கப் பட்டது.
இது முதன்முதலில் தமிழ் சினிமாவிலிருந்து நடிகர் சிவாஜி கணேசனால் 1995 ஆம் ஆண்டிலும், பின்னர் 2016 ஆம் ஆண்டில் கமல்ஹாசனாலும் பெறப் பட்டது.
தூத்துக்குடியில் உள்ள VOC துறைமுகம், ஒரே கப்பலில் இருந்து 103 காற்றாலை இறக்கைகளை இறக்கி சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோவின் டேட்டனில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு டேட்டன் இலக்கிய அமைதி பரிசு விழாவில், சல்மான் ருஷ்டி தூதர் ரிச்சர்ட் C. ஹோல்ப்ரூக் சிறப்பு சாதனையாளர் விருதை (வாழ்நாள் சாதனையாளர் விருது) பெற்றார்.
காலின்ஸ் அகராதியானது 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டின் சிறந்த சொல்லாக ‘Vibe coding’ என்ற சொல்லினைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்திய இராணுவம் ஆனது, குஜராத்தின் ரான் மற்றும் க்ரீக் துறையில் திரிசூல் என்ற முப்படைகளின் பயிற்சியின் ஒரு பகுதியான பிரம்மஷிரா பயிற்சியினைத் தொடங்கி உள்ளது.
நிலம், கடல் மற்றும் வான் முழுவதும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறன்களை சரி பார்க்க இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவை இந்தப் பயிற்சியில் ஈடுபடுகின்றன.