வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ஆனது, மும்பையில் "புல்லியன் பிளேஸ் நடவடிக்கை" என்ற குறியீட்டுப் பெயரில் ஒரு பெரிய தங்கக் கடத்தல் மற்றும் உருக்கல் கும்பலைக் கண்டுபிடித்தது.
பிரம்மபுத்திரா நதியில் நதிப் போக்குவரத்தை மேம்படுத்தவும், அதனைச் செயல் திறன் மிக்கதாகவும் மாற்ற இந்தியாவின் முதல் நவீன நதிப் படகு முனையம் என்பது கௌஹாத்தியில் திறக்கப்பட்டது.
இந்தியா – பிரான்சு இடையிலான கருடா - 2025 என்ற இருதரப்பு விமானப் படைப் பயிற்சி பிரான்சில் நடைபெற்றது.
போதைப்பொருள் தீவிரவாதிகளைக் குறி வைத்து கொக்கைன் கடத்தல் வலை அமைப்புகளைச் சீர்குலைக்க கரீபியன் மற்றும் தென் அமெரிக்காவில் சதர்ன் ஸ்பியர் நடவடிக்கை என்ற இராணுவப் பிரச்சாரத்தினை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பின் பொது மாநாடு ஆனது, எகிப்தின் கலீத் எல்-எனானியை அதன் தலைமை இயக்குநராகத் தேர்ந்தெடுத்தது.
2017 ஆம் ஆண்டு முதல் இந்தப் பதவியை வகித்து வரும் ஆட்ரே அசௌலேவினை அடுத்து அவர் பதவியேற்றார்.