தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், குழந்தை உரிமைகள் மற்றும் மனநல விழிப்புணர்வு குறித்த முன்னெடுப்புகளை ஆதரிப்பதற்காக யுனிசெஃப் இந்தியா பிரிவின் பிரபல ஆதரவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கு இடையிலான கூட்டுறவினை வலுப்படுத்துவதற்காக இந்தியா-ஐக்கியப் பேரரசு இடையிலான எட்டாவது கூட்டு இராணுவப் பயிற்சியான அஜயா வாரியர்-25 இராஜஸ்தானில் தொடங்கப் பட்டது.
1939 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதியன்று நாஜி ஒடுக்குமுறையை எதிர்த்த செக் மாணவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க துணிச்சலைக் குறிக்கும் வகையில் சர்வதேச மாணவர் தினமானது நவம்பர் 17 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Empowering Students to be Agents of Change" என்பதாகும்.