TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 11 , 2025 13 days 66 0
  • காட்டு யானைகள் மற்றும் பிற வனவிலங்கு இனங்களைப் பிடிப்பது, இடமாற்றம் செய்வது, விடுவிப்பது மற்றும் விடுவித்த பிறகு கண்காணிப்பதற்கான விரிவான சீர்தர இயக்கச் செயல்முறையை (SOP) உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு ஓர் உயர் மட்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
  • இந்திய இராணுவமானது, அருணாச்சலப் பிரதேசத்தில் முதன்முதலில் காங்டோ மலையில் (7042 மீ / 23,103 அடி) ஏறுவதை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
  • அதானி குழுமமானது, தெலுங்கானாவில் 2,500 கோடி ரூபாய் செலவில் 48 மெகாவாட் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு பசுமைத் தரவு மையத்தை அமைத்து வருகிறது.
  • மகாராஷ்டிராவின் தொழிலாளர் மற்றும் சமூக நீதி இயக்கங்களில் மூத்த சமதர்ம வாதத் தலைவரும் முக்கிய ஆர்வலருமான டாக்டர் பாபா ஆதவ் சமீபத்தில் காலம் ஆனார்.
  • அமெரிக்கா அல்லாதச் சந்தைகளுக்கான ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக சீனாவின் வர்த்தக உபரி 2025 ஆம் ஆண்டில் முதல் முறையாக 1 டிரில்லியன் டாலரைத் தாண்டியது.
  • உயரமான எல்லைப் பகுதியில் அனைத்து வானிலைகளிலுமான போக்குவரத்து இணைப்பையும் வழங்குவதற்காக எல்லைச் சாலைகள் அமைப்பால் (BRO) லடாக்கில் கட்டமைக்கப்பட்ட 920 மீட்டர் நீள ஷியோக் சுரங்கப்பாதையானது பாதுகாப்புத் துறை அமைச்சரால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது.
  • யுனெஸ்கோவின் மகத்தான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (ICH- 2025) 20வது அமர்வை இந்தியா புது டெல்லியில் நடத்துகிறது.
  • உலகின் அதிகளவில் செயல்பாட்டில் இருக்கும் எரிமலைகளில் ஒன்றான கிலாவியா, அதன் தொடர்ச்சியான வெடிப்புக் கட்டத்தின் ஒரு பகுதியாக ஹவாய் எரிமலைகள் தேசியப் பூங்காவிற்குள் புதிய பாறைக் குழம்பு ஊற்றுகளை உருவாக்கியுள்ளது.
  • சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) திட்டத்தின் கீழ் வாக்காளர் பட்டியல்களை 100% டிஜிட்டல் மயமாக்கிய முதல் மாநிலமாக இராஜஸ்தான் மாறியது.
    • அம்மாநில அரசானது, இந்தியாவிலேயே மிகவும் உயர்ந்ததாக 97% வாக்காளர் வரைபடப் பதிவினையும் நிறைவு செய்துள்ளது.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளில் குடகு ஷேடோடம்செல் (புரோட்டோஸ்டிக்டா சூரியப் பிரகாஷி) என்ற புதிய ஊசித் தட்டான் இனம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • மேற்குத் தொடர்ச்சி மலை வளங்காப்பிற்கு டாக்டர் சூரியப் பிரகாஷ் ஷெனாய் ஆற்றியப் பங்களிப்புகளுக்காக இந்த இனத்திற்கு அவரது பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்