சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான புவி வாகையர் விருதை வென்றுள்ளார்.
யூடியூப்பின் இந்திய-அமெரிக்கத தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன், டைம் இதழின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக அறிவிக்கப் பட்டு உள்ளார்.
இந்திய அஞ்சல் துறையானது, கோட்டயத்தில் உள்ள CMS கல்லூரியில் கேரளாவின் முதல் Gen-Z அஞ்சல் அலுவலக விரிவாக்க முனையத்தினைத் திறந்துள்ளது.
இந்தியா தனது முதல் மெகாவாட்-மணிநேர (MWh) அளவீட்டில் வெனடியம் ரெடாக்ஸ் ஃப்ளோ பேட்டரி (VRFB) எனும் மின் கல அமைப்பினை உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் திறந்து வைத்தது.
மூன்று வயது இந்தியச் சிறுவன் சர்வாக்யா சிங் குஷ்வாஹா 2025 ஆம் ஆண்டில் உலகின் இளம் FIDE-மதிப்பீடு பெற்ற சதுரங்க வீரரானார்.
பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு FIDE சர்க்யூட் 2025 போட்டியில் வென்று, சைப்ரஸில் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு கேண்டிடேட்ஸ் போட்டிக்கான இடத்தைப் பிடித்தார்.
குமாவோன் இமயமலையில் உத்தரக்காண்ட் மாநிலத்தில் சுந்தர்துங்கா பனிப்பாறை பள்ளத்தாக்கில், சுமார் 10,000 அடி உயரத்தில் ஒரு வங்காளப் புலி தென்பட்டது.
பம்பாயின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உள்ள புதுமை மற்றும் தொழில் முனைவோர் சங்கம் (SINE) ஆனது 250 கோடி ரூபாயுடன் இந்தியாவின் முதல் தொழிற்காப்புடன் இணைக்கப்பட்ட தொழில்நுட்பப புதுமைக்கான துணிகர மூலதன நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் விலங்கு உரிமைகள் மற்றும் வனவிலங்குப பாதுகாப்புக்கான தனது அர்ப்பணிப்புக்காக PETA இந்தியாவின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த நபராகப பெயரிடப்பட்டார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) கடவுச் சீட்டானது, 184 இடங்களுக்கு பயணம் மேற் கொள்ளும் வசதியுடன் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் 8வது வலிமையான கடவுச் சீட்டாக பெயரிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில் 42வது இடத்திலிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச் சீட்டானது 2025 ஆம் ஆண்டில் 8 வது இடத்திற்கு உயர்ந்தது.
ஹின்டர்லேண்ட் ப்ரூ நடவடிக்கை கீழ் மகாராஷ்டிராவின் வார்தாவில் ஒரு சட்ட விரோத மெபெட்ரோன் உற்பத்தி அலகினை DRI (வருவாய்ப புலனாய்வு இயக்குநரகம்) கண்டுபிடித்துள்ளது.
மெபெட்ரோன் என்பது வேதியியல் ரீதியாக 4-MMC (4-மெத்தில்மெத்காத்தினோன்) என்று அழைக்கப்படும் ஒரு செயற்கை ஊக்க மருந்து ஆகும்.
ஆஸ்ட்ராஜெனெகா பார்மா இந்தியா மற்றும் சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இந்தியாவில் சோடியம் சிர்கோனியம் சைக்ளோசிலிகேட் (SZC) மருந்தினை சந்தைப்படுத்த கூட்டு சேர்ந்துள்ளன.
மிகவும் நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் இருதயச செயலிழப்பு நோயாளிகளில் ஹைபர்கலேமியாவை (அதிகப்படியான பொட்டாசியம்) நிர்வகிக்க SZC பயன்படுத்தப் படுகிறது.